Tuesday, June 2, 2020

மகேஷ்

வணக்கம்
சமீப காலமாக செய்திதாள்களில் ஊடகங்களில் மற்றும் சமூக வலைதளங்கள் என எங்கு பார்த்தாலும் சிறுமியருக்கு எதிரான பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களே நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

"சிறுமியர் எல்லாம் தேவியின் வடிவம்"

என போற்றி வணங்கிய நம் நாட்டில் அவர்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.
இவை நமது பண்பாட்டை நம் கலாச்சாரத்தை சீரழிக்க அன்னிய சக்திகளால் கற்பிக்க படுகின்றனவா என்ற ஐயப்பாடும் வருகின்றது. காரணம் , ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் முறை , வாடிக்கையாளரை வேடிக்கையாளராக மாற்றி அவற்றின் வீரியத்தை உணர்த்தாமல் , அவற்றை ஒரு விறுவிறுப்பான செய்தியாக மாற்றி மக்கள் மத்தியில் அது ஒரு இயல்பான விஷயமாக மாற்றுவதே வேடிக்கையாக போய்விட்டது.
சரி....
குழந்தைகள் மேல் காம குரோத செயல்களை செய்ய தூண்டுவது எது?
தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் பதிவான தகவல்களின் படி கடந்த ஜந்து ஆண்டுகளில் 300% குற்ற செயல்கள் பெண்களுக்கு , மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றமாக பதிவாகியுள்ளது.
உலகுக்கு ஒழுக்கத்தை , நாகரீகத்தை உணர்த்திய நம் சமூகத்தில் இப்படி பட்ட சம்பவங்கள் நடைபெறுவது வேதனையே. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக...

குழந்தைகளை 
" வாரி அனைத்து வலது கண்ணம் முத்தமிட்டோம்
ஏந்தி கையில் எடுத்து இடது கண்ணம் முத்தமிட்டோம்"
ஆனால் .... 
தற்போது குழந்தைகளை தூக்கி கொஞ்ச நினைத்தாலே 
ஐயோ ....
என்ற எண்ணத்தை மனதுக்குள்ளே உறுவாக்கி விட்டது தற்போது நடைபெற்ற சம்பவங்கள்.உறவு முறையின் கட்டமைப்பு முழுவதையும் சிதைக்கும் வண்ணம் தந்தை , மாமன் , நண்பன் , அண்ணன் , ஏன் 80-வயது முதியவர் வரை குழந்தை களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதற்கான காரணம் யார்?

எந்த ஒரு கொடூரனும் தான் தனது வக்ர தன்மையை ஒரே நாளில் செயல்படுத்துகின்றான என்றால் இல்லை (சில சம்பவங்களை தவிர்த்து) .
பல நாட்கள் குழந்தையுடன் பழகி பாலியல் தொல்லைகள் கொடுத்து அவன் வக்ர புத்தி உச்சத்தை அடையும் போது அது கொலையாக மாறுகின்றது.

குழந்தைகளுக்கு இக் கிராதகர் தங்களுடன் பழகும் முறை தொடுகின்ற முறைகளை பற்றி எதுவும் தெரியாது. பெற்றோர்களும் அதனை கவனிக்க தவறிவிடுகின்றனர். மேலும் சில குழந்தைகள் பெற்றோரிடம் தெரிவித்தால் வெளியில் விளையாட அனுமதிக்க மாட்டார்கள் அல்லது தண்டித்து விடுவார்கள் என்ற அச்ச உணர்வுடன் மறைத்து விடுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பாக 14 - வயது மாணவன் 13-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொடுரமான முறையில் கொலையும் செய்துள்ளான் . காவலர்கள் அச்சிறுவனை விசாரிக்கவே அவனுடைய பதில்கள் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றது.
தந்தை யூ-ட்யுபில் ஆபாச வீடியோக்களை பார்த்து விட்டு அதனை மறந்து விட்ட செல்ல அதனை அச்சிறுவன் பார்த்து தான் செய்தேன் என்கின்றான்.
ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு தெரியும்
நம் வீட்டு தொலைகாட்சி பெட்டியில் சினிமா பார்கும் போது ஒரு முத்த காட்சி வந்தாலே அடுத்த Channel யை வைத்து விடுவார்கள். இப்படி ஒவ்வொறு விஷயங்களிலும் கண்ணும் கருத்துமாக பார்த்து வளர்த்தனர்.
ஆனால் தற்போது குழந்தைகள் வளர்கபடும் முறை மற்றும் வளரும் முறையை பார்த்தால் வேதனை.
இதனை பற்றி எங்கள் ஊர் பெரியவரிடம் கேட்டபோது , ஒரு காலத்தில் தாம்பத்ய உறவு கொள்வது பற்றி பெரியவர்கள் தம்பதினயருக்கு சொன்ன காலம் போய், தற்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இனையத்தின் மூலம் அறிந்து கொண்டு மனசஞ்சலத்திற்கு ஆளாக்கபடுகின்றனர். இது நாளடைவில் கொடூர செயல்களாக நடைப்பெறுகிறது.
இது போன்ற குற்ற செயல்களில் இனையத்தின் பங்கை விட பெற்றோறின் பங்கும் உண்டு என்பதை தவிர்ப்பதற்கு இல்லை.
தன் குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டவுடன் அதனை வாங்கி தருவது. பின் அவர்கள் மேல் கவனக்குறைவாக இருப்பது. அவர்களின் பருவ நிலை மாற்றதை அறியாமல் இருப்பது மற்றும் அவர்களின் நண்பர்கள் யார் நண்பர்களுடன் என்ன செய்கின்றனர் என தன் மகனின் எந்த வித தகவல்களை அறியாமல் இருப்பது போன்றவையே.
எனவே பெற்றோர்களின் கையில் தான் உள்ளது அவர்களின் ஆரோக்யமான வாழ்கை.
பலர் கூறிய கருத்துகள் தான் மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

முதலில் குழந்தைகளுடன் மனமிட்டு பேசுங்கள் தேவை பட்டால் நண்பராக ஏன் குழந்தையாக கூட மாற தயங்காதீர்கள்.
உறவு முறைகளை அறிமுகப்படுத்தி அதன் மேன்மையை உணர்த்துங்கள்.
அறிமுகமில்லா நபரிடம் பேசும் போதோ அல்லது பழகும் போதோ அவர்களின் செயல்பாடுகளில் உள்ள வேற்றுமையை உணர்த்துங்கள்.
கைபேசி போன்ற உபகரணங்களை முடிந்த அளவிற்கு அவர்கள் பயன்படுத்தாத படி அவர்களை நண்பர்களுடன் ஒடி ஆடி விளையாட அனுமதியுங்கள்.
அவன் வாலிப பருவம் ஏய்தும் போது அவனது நடைமுறை பழக்க வழக்கங்களை கவனித்து நல்ல ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வைத்து அவன் திறமையை வளர்க்கும் வண்ணம் விளையாட்டோ அல்லது அரசியலோ கற்று கொடுங்கள் அதற்கான ஏற்பாட்டினை செய்து தாருங்கள்.
முதலில் பெற்றோர் குழந்தைகளுக்கு ஆற்றும் கடமைகளை சிறப்பாக செய்யுங்கள். அதை தவிர்த்து விஞ்ஞானத்தையோ அல்லது சமூகத்தையோ குறை சொல்லி எந்த பயனும் இல்லை. மாற்றம் நம்மிடம் இருந்தே தெடங்கட்டும். நிச்சயமாக ஒரு சிறந்த இளைஞர் பட்டாளம் உறுவாகும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் வேண்டாம்.
நன்றி
இப்படிக்கு
கொடுமுட்டி ம.தி.மகேஷ்